தெலங்கானா பொது தேர்தல் நடைபெறும்வரை நோட்டா படத்தை வெளியிடாமல் தள்ளி வைக்க வேண்டும்

விக்ரம் பிரபு நடித்த ‘அரிமா நம்பி’, விக்ரம் நடித்த ‘இருமுகன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஆனந்த் சங்கர் இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகி உள்ள படம் நோட்டா (‘NOTA’).

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரேநாளில் வெளியாகவிருக்கும் இந்தப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ படநாயகன் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும், மெஹ்ரீன் பிரசித்தா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தில் ஒரு காட்சியில் தனது குருநாதரான ஏ.ஆர்.முருகதாஸை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்துள்ளார் ஆனந்த் சங்கர். அரசியல் படமாக உருவாகியுள்ள நோட்டா வரும் 5 ஆம் தேதி வெளி வருகிறது.

இதற்கிடையில் தெலங்கானா பொது தேர்தல் நடைபெறும்வரை நோட்டா படத்தை வெளியிடாமல் தள்ளி வைக்க வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் மத்திய அரசுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Sharing is caring!