தெலுங்கானா, ஆந்திராவிலும் சக்கை போடு போடும் 2.0 படம்

சென்னை:
தெலுங்கானா, ஆந்திராவிலும் வசூல் வேட்டை நடத்தி உள்ளது ரஜினியின் 2.0 படம்.

பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மொத்த தமிழ் சினிமாத்துறையையும் பேசவைத்த படம் ரஜினி நடித்த 2.0. இந்த படம் கடந்த நவம்பர் 29 ல் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியானது.

உலகம் முழுக்க ரூ.500 கோடிகளை தாண்டி வசூல் செய்து வருகிறது. தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் கடந்த 16 நாட்களில் மொத்தம் ரூ.50.93 கோடி வசூலை அள்ளியதோடு 50 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

இதுவரை வேறெந்த டப்பிங் படங்களும் இந்த தொகையை எட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!