தெலுங்கிலும் உயருது கீர்த்தி சுரேசின் கிராப்…!

சென்னை:
கீர்த்தி சுரேசின் சினி பயணம் உயரே உயரே போய் கொண்டு இருக்கிறது. இதை பார்த்து மற்ற நடிகைகள் அதிர்ந்து போய் உள்ளனர்.

சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் இப்போது டாப் ஹீரோயின்களில் ஒருவர். தெலுங்கிலும் அவர் தனக்கான மார்கெட்டை பிடித்து விட்டார்.

அவருக்கு அங்கும் ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன் அவர் நடிப்பில் வெளியான மகாநதி படம் சூப்பர் ஹிட்டானது. அவருக்கு பலத்த பாராட்டுக்களை கொடுத்தது.

தற்போது அவர் பாகுபலி புகழ் பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளராம். ராம ராவண ராஜ்யம் என்னும் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ராவணனாகவும், ராம் சரண் ராமனாகவும் நடிக்கும் படத்தில் அவர் இணைகிறார். அதிலும் அவருக்கு சீதை வேடமாம். இப்படி இவரது சினி கிராப் உயர்ந்து கொண்டே செல்வது மற்ற நடிகைகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!