தெலுங்கில் சக்கை போடு போடும் சண்டகோழி -2

சென்னை:
தெலுங்கில் செம வசூல் செய்து அதிரடித்து வருகிறது சண்டகோழி 2 படம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஷால், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள சண்டகோழி 2 படம் கடந்த 19ம் தேதி வெளியானது. சண்டகோழி படத்தை தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் அடுத்த பாகமாக படம் வெளியானது.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படத்தின் வசூல் சிறப்பாக உள்ளது. தெலுங்கில் இப்படம் அபிமன்யுடு என்ற பெயரில் வெளியாகியுள்ளது. கடந்த நான்கு நாட்களில் இப்படம் சுமார் ரூ. 9 கோடி வசூலித்துள்ளதாம். அதிலும் ரூ.5 கோடியை பங்கு தொகையாக பெற்றுள்ளதாம்.

இதனால் படத்தை வாங்கியவர்களுக்கு நிச்சயம் லாபம் தான் என்கிறார்கள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!