தெலுங்கில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கும் காஜல் அகர்வால்

மும்பை:
தெலுங்கில் பணப் பேராசை கொண்ட நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார் காஜல் அகர்வால் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ள காஜல் அகர்வால் தெலுங்கு படம் ஒன்றில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாராம். தேஜா இயக்கும் தெலுங்கு படம் ஒன்றில் காஜல் பணம் மற்றும் பேராசை பிடித்த நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இதுவரை காஜல் அப்பாவி பெண்ணாக நடித்ததுதான் அதிகம்.

முதல் முறையாக நெகட்டிவ் கேரக்டர் ஏற்று நடித்து வருகிறாராம். இதுவரை காஜல் நடித்து முடித்துள்ள காட்சிகளை பார்த்து இயக்குனரும், தயாரிப்பாளரும் ரொம்பவே திருப்தி அடைந்துள்ளனராம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!