தெலுங்கு சூப்பர் ஸ்ராருடன் ஜோடி சேரும் சாய்பல்லவி

நடிகை சாய்பல்லவியின் ரவுடி பேபி பாடல் உலகம் முழுவதும் ஹிட்டாகி உள்ள நிலையில் அவர் அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பிரேமம் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை சாய்பல்லவி, அதன் பிறகு பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பின்னர் கரு படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். இந்நிலையில் தனுஷுடன் இணைந்து அவர் நடித்த மாரி 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

குறிப்பாக இந்த திரைப்படத்தின் ரவுடி பேபி பாடல் உலகளவில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபன் அண்ட் ஃபரஸ்டிரேஷன் படத்தை இயக்கிய அணில் ரவிப்புடி இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க உள்ளது.

Sharing is caring!