தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுடன் கூட்டணி சேர்கிறார் முருகதாஸ்

சென்னை:
ரஜினியின் படத்தை முடித்த பின்னர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுடன் இயக்குனர் முருகதாஸ் கூட்டணி சேர்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த வருடம் சர்கார் என்ற வெற்றி படத்தை கொடுத்தவர் ஏ.ஆர். முருகதாஸ். இப்படத்தை தொடர்ந்து அவர் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குகிறார்.

ஆனால் அப்படம் எப்படிபட்ட கதை, எப்போது படப்பிடிப்பு என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்த நேரத்தில் முருகதாஸ் அடுத்து தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகரான அல்லு அர்ஜுனுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுனும் நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவில் ஒரு ஹிட் கொடுக்க காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் முருகதாஸ் தெலுங்கு சினிமா நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் என்ற படத்தை கொடுத்தார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!