தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டுகளில் ராகவா லாரன்சும் ஒருவர்

தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, சில மாதங்களுக்கு முன்பு சில நடிகர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். அவர் குற்றம் சுமத்தியவர்களில் இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்சும் ஒருவர். ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டை மறுத்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டி அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினால் அவரைத் தன் படத்தில் நடிக்க வைப்பதாகவும் அறிவித்தார்.

இதனிடையே, சமீபத்தில் சென்னைக்கே வந்து செட்டில் ஆனார் ஸ்ரீரெட்டி. இங்கு அவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. நேற்று தன்னுடைய முகப்புத்தகத்தில் ராகவா லாரன்சைச் சந்தித்தது பற்றி ஸ்ரீரெட்டி ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், “எனது நண்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நான் லாரன்சு காருவை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவர் என்னை இனிமையாக வரவேற்றார். அவரது வீட்டில் பல குழந்தைகளைப் பார்த்தேன். அவர்கள் அவருடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் எனக்காக பிரார்த்தனை செய்தார்கள். நான் ஆடிஷனும் அளித்தேன். அவருடைய அடுத்த படத்தில் என்னைத் தேர்வு செய்துள்ளார். எனக்கு நல்ல கதாபாத்திரம் தருவதாக வாக்களித்துள்ளார். அதற்கான முன்பணத்தையும் பெற்றுக் கொண்டேன். அந்தப் பணத்தை புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீகாகுளம் மக்களுக்காகப் பகிர்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.

Sharing is caring!