தெலுங்கு நடிகையுடன் பிரச்னை… காஜல் எடுத்த முடிவு

ஐதராபாத்:
அந்த நடிகையின் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட பின்னர் வருகிறேன் என்று பிடிவாதம் காட்டியுள்ளார் நடிகை காஜல்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் முன்னணியில் இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் ஒரு பிரபல நடிகையுடன் காஜல் சண்டை போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவச்சம் என்ற தெலுங்கு படத்தில் காஜல் மற்றும் நடிகை மெஹரீன் இணைந்து நடித்துள்ளனர். ஷூட்டிங்கின்போதே இவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

அதனால் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்துகொள்வதில்லை. சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவுக்கு மெஹ்ரீன் வரவில்லை. அதற்கு காஜலுடன் நடந்த சண்டை தான் காரணம் என கூறப்படுகிறது.

மேலும் வெளிநாட்டில் ஷூட்டிங் நடந்த போது மெஹரீன் நடிக்கும் காட்சிகள் எடுத்து முடிந்தபிறகு தான் நான் அங்கு வருவேன் என இந்தியாவிலேயே இருந்தாராம் காஜல்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!