தெலுங்கு படத்தில் நடிக்கும் 9 முன்னணி நடிகைகள்

ஐதராபாத்:
முன்னணி நடிகைகள் 9 பேர் ஒரே படத்தில் நடிக்கின்றனர் தெரியுங்களா?

தெலுங்கு சினிமாவில்தான் பெரும்பாலும் ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் நடிப்பது சகஜமான ஒன்று. இந்நிலையில் தற்போது ஒரு படத்தில் 9 ஹீரோயின்கள் நடிக்க இருக்கின்றனர். அதுவும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணியில் உள்ள நடிகைகள்.

மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் குறித்த படத்தில்தான் 9 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் வித்யாபாலன், ரகுல் ப்ரீத் சிங், நித்யா மேனன், அனுஷ்கா, ஷாலினி பாண்டே, பாயல் ராஜ்புத், ஹன்சிகா, மாளவிகா நாயர், மஞ்சிமா மோகன் என 9 நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளனர்.

கதாநாயகன் வேறு யார்? என்.டி.ராமராவ் வேடத்தில் என்.டி.பாலகிருஷ்ணாதான் நடிக்கிறார். மேலும் சந்திரபாபுநாயுடு கதாபாத்திரத்தில் ராணாவும், அவரது மனைவியாக மஞ்சிமா மோகனும் நடிக்கின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!