தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி

ஐதராபாத்:
மெகாஸ்டார் குடும்பத்தில் இருந்து வரும் மற்றொரு புதிய நடிகரான பஞ்சா வைஷ்ணவ் தேஜ் என்ற நடிகரின் அறிமுக படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தெலுங்கு மீடியாவில் தகவல் பரவி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் கச்சிதமாக பொருந்தக்கூடியவர். அவர் வில்லனாக நடித்த விக்ரம் வேதா படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். ஆனால் இது தமிழில் இல்லை தெலுங்கில்.

மெகாஸ்டார் குடும்பத்தில் இருந்து வரும் மற்றொரு புதிய நடிகரான பஞ்சா வைஷ்ணவ் தேஜ் என்ற நடிகரின் அறிமுக படத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தெலுங்கு மீடியாவில் தகவல் பரவி வருகிறது.

இந்த படத்திற்கான கதையை முன்னணி இயக்குனர் சுகுமார் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!