தெலுங்கு படம் துளசியின் காப்பிதான் விஸ்வாசம்? தகவலால் பரபரப்பு!!!

சென்னை:
விஸ்வாசம் படம் தெலுங்கு படமான துளசியின் காப்பி என்று கூறப்படுகிறது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது. இப்படம் தெலுங்கில் வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் கடந்த 2007ல் வெளியான துளசி படத்தின் காப்பி என கூறப்பட்டு வருகிறது.

இரு படங்களின் மையக்கருத்தும் ஒன்றாக தான் உள்ளது. கணவனின் வன்முறை குணத்தால் அவரை பிரிந்து மனைவி தன் மகனுடன் தனியாக வாழ்கிறாள். மனைவியின் கோபத்தால் தன் சொந்த மகனிடமே தான் யார் என்ற உண்மையை மறைத்து பழகுகிறார் அப்பா.

பிறகு மகனுக்கு வரும் பிரச்னையை எப்படி தீர்க்கிறார்? குடும்பத்தை எப்படி இணைக்கிறார் என்பது தான் துளசி படத்தின் கதை. இதுதான் விஸ்வாசம் படத்தின் மையக்கருவும் கூட. தற்போதைய காலத்திற்கு ஏற்ப திரைக்கதையை மாற்றி படத்தை எடுத்துள்ளனர். இப்படி காப்பி அடித்து எடுத்துள்ளதால் பிரச்னை கிளம்பலாம் என்று தெரிகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!