தேனீக்களின் காவலனாக ஹாலிவுட் நடிகர்

‘இன்விக்டஸ்’ என்னும் திரைப்படத்தில்  நெல்சன் மண்டேலாவாக நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் மோர்கன் .  இவர் மிசிசிபி நகரில் உள்ள தனது 124 ஏக்கர் பண்ணையைத் தேனீக்கள் சரணாலயமாக மாற்றியிருக்கிறார்.

மேலும் தேனீக்கள் இனத்தைப் பெருக்கும் விதமாக ஆர்கன்சாஸ் பண்ணையிலிருந்து 26 தேனீ ரகங்களைச் சமீபத்தில் இறக்குமதி செய்துள்ள மோர்கன், அமெரிக்காவில் 2015 – 2016 ஆண்டு இடைவெளியில், தேனீக்களின் எண்ணிக்கை 44 சதவிகிதம் குறைந்துவிட்டதால்.  என் பண்ணையைத் தேனீக்களின் கூடாக மாற்றினேன்’ என்று தெரிவித்துள்ளார் .

Sharing is caring!