தேவயானியும் அடுத்த ரவுண்டுக்கு, கோதாவில் குதித்திருக்கிறார்

ஏற்கனவே அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து வந்த தேவயானிக்கு, அதன்பின், முதிர்ச்சியான வேடங்களை தவிர்த்தார். ஆனால், அவரது சம காலத்து நடிகையான சிம்ரன், மீண்டும் களமிறங்கி, வில்லியாக வரிந்து கட்டி வருவதை அடுத்து, தேவயானியும் அடுத்த ரவுண்டுக்கு, கோதாவில் குதித்திருக்கிறார்.

நடிகர் தினேஷ் நடித்துள்ள, களவாணி மாப்பிள்ளை என்ற படத்தில், கதாநாயகியின் அம்மாவாக நடித்துள்ளார். இதையடுத்து, கதையில் தனக்கு முக்கியத்துவம் இருந்தால், இதைவிட முதிர்ச்சியான வேடங்களில் நடிக்கவும் தயார், என்று கோலிவுட்டில் செய்தி வெளியிட்டிருக்கிறார். ஊதின சங்கு ஊதினால், விடிகிறபோது விடியட்டும்!

Sharing is caring!