தேவி 2. – மொரீஷியஸில் 30 நாட்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அண்மையில் வெளியான பல படங்கள் வணிக ரீதியில் வெற்றியடையவில்லை. ஆனாலும் அரைடஜன் படங்கள் அவர் கைவசம் வைத்திருக்கிறார். அதில் ஒன்று… தேவி-2.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த முதல் படம் ‘தேவி’. 2016-ல் வெளியான ‘தேவி’யில் தமன்னா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் இருவருக்கும் வெற்றிப் படமாக அமைந்தது.

தேவி படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் ‘லக்ஷ்மி’ படத்தில் மீண்டும் இணைந்தனர். சமீபத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஏ.எல்.விஜய்யும், பிரபு தேவாவும் மூன்றாவது முறையாக ‘தேவி’ படத்தின் இரண்டாம் பாகமான தேவி-2 படத்தை உருவாக்குகிறார்கள்.

‘தேவி -2’ படத்தின் படப்பிடிப்பு நேற்று மொரீஷியஸில் துவங்கியுள்ளது. தொடர்ந்து 30 நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடைபெறுகிறது. பிரபுதேவாவுடன் கோவை சரளாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Sharing is caring!