தேவ் படத்தின் படுதோல்விக்கு காரணம் நடிகர் கார்த்தியின் தலையீடு?

சென்னை:
கார்த்தி நடித்த தேவ் படம் படு தோல்வி அடைய என்ன காரணம் என்று கோலிவுட்டில் ஒரு செய்தி உலா வந்து கொண்டு இருக்கிறது.

கார்த்தி நடித்த தேவ்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து படுதோல்வி அடைந்தது. இந்த படம் வெளியான மூன்றே நாட்களில் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து படம் தூக்கப்பட்டுவிட்டது. கார்த்தியின் திரையுலக வாழ்வில் இதுவொரு மோசமான அனுபவமாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்த படத்தை தான் நினைத்தபடி இயக்க கார்த்தி சுதந்திரம் அளிக்கவில்லை என இயக்குனர் ரஜத் தரப்பினர் கூறி வருகின்றனர். தேவ் படத்தில் கார்த்தியின் தலையீடு அதிகம் இருந்ததாகவும், இயக்கம், எடிட்டிங் மற்றும் மிக்சிங் உள்பட அனைத்து துறையிலும் கார்த்தியின் தலையீடு இருந்ததாம்.

அவரே களமிறங்கி பல பணிகளை இஷ்டத்திற்கு பார்த்ததாகவும், இதனால் ரஜத் ஓரங்கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படம் கொடுத்த பாடத்தினால் இனிமேல் நடிப்பு தவிர வேறு எந்த துறையிலும் தலையிடுவதில்லை என கார்த்தி முடிவெடுத்துள்ளாராம்.

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக சில ஆண்டுகள் கார்த்தி பணிபுரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!