தேவ் படம் இடைநிறுத்தம். கார்த்திக் சென்னை திரும்பினார்

ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுர் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் ‘தேவ்’ படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் சுமார் 140 பேர் குலுமணாலி சென்றிருந்தனர். நடிகர் கார்த்தி, இயக்குனர் ரஜத், ஒளிப்பதிவாளர் மற்றும் படக்குழுவினர் அங்கு ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தில் படக்குழுவினரும் சிக்கிக் கொண்டார்கள்.

இதனால் படப்பிடிப்பை தொடர்ந்த நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இப்போது கார்த்தி மணாலியிலிருந்து சென்னைக்குத் திரும்பி விட்டதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில், “எங்களில் சிலர் நேற்று இரவு சென்னை திரும்பிவிட்டோம். இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் குழுவினர் இன்னும் மணாலியில் பத்திரமாக இருக்கிறார்கள். மின்சாரம், சாலை வசதி இல்லாததால் அவர்கள் ஒரு நாள் கழித்துதான் இறங்க முடியும். மழை சீக்கிரமே நிற்கும் என நம்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!