தொடர்ந்து வெளியாகும் தனுஷ் படங்கள்… ரசிகர்கள் உற்சாகம்

சென்னை:
இந்தாண்டு இறுதி வரை தனுஷ் படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளதால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

தனுஷ், தமிழ் சினிமாவின் பல திறமைகளை கொண்ட நடிகர்களில் ஒருவர். தற்போது இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் வடசென்னை. வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படம் அக்டோபர் 17ல் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்ததாக என்னை நோக்கி பாயும் தோட்டா படம், விஜய்யின் சர்காருடன் தீபாவளிக்கு ரிலீஸாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் யுவன் இசையில் தனுஷ் நடித்திருக்கும் மாரி-2 படமும் இந்த வருட இறுதியில் டிசம்பர் 21ல் ரிலீஸாகும் என்று தெரிய வந்துள்ளது.

அதே தேதியில் லாரன்ஸின் காஞ்சனா-3யும் விக்ரமின் துருவ நட்சத்திரமும் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. இந்த வருட இறுதி வரை தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் போங்க.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!