தொலைக்காட்சி பெயர் பதிவு எங்களுக்குதான்… ரஜினி அறிவிப்பு

சென்னை:
தொலைக்காட்சிக்கான பெயர் பதிவு எங்களுக்குதான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ரஜினி.

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி துவங்கவுள்ள நிலையில் தற்போது கட்சிக்காக ஒரு தொலைக்காட்சி துவங்கியுள்ளார். அதுபற்றிய செய்திகள் சமீபத்தில் வைரலாகிய நிலையில் தற்போது ரஜினிகாந்த் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வெளிநாடு சுற்றுலா செல்ல அவர் சென்னை விமான நிலையம் வந்த நிலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

“வேறு யாரும் பதிவு செய்துவிடக்கூடாது என்பதற்காக தற்போதே எனது பெயரில் தொலைக்காட்சிக்கான பெயரை பதிவு செய்துள்ளோம். கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி பற்றி பேசலாம்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் டிவியின் பெயர் பதிவு செய்யப்பட்ட மூன்று பெயர்கள் – சூப்பர்ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி ஆகியவற்றில் ஒன்றாக தான் இருக்கும் என உறுதியாகியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!