தொழில் அதிபர் வாழ்க்கை வரலாறா? சூர்யாவின் அடுத்த படம்!

சென்னை:
இறுதி சுற்று படத்தின் இயக்குனர் சுதா கங்கனா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா நடிக்கும் படம் தொழில் அதிபர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவியது என்று கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார்.

அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்தார். இதில் அரசியல்வாதியாக சூர்யா நடித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளது. தற்போது கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கங்கனா இயக்கத்தில் சூர்யா தனது 38 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். ‘சூர்யா 38 ‘படம் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழில் அதிபர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!