த்ரில்லர் கதையில் அஞ்சலி…..அருள்நிதி ஜோடி

கண்ணே கலைமானே’ படத்தைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகும் கிராமத்து கதையில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார்.

டைம்லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் இந்த படம் கிராமத்து பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ளது.

இத்திரைப்படத்தின் ஏனைய கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனிக்கின்றார்.

அருள்நிதி தற்போது பரத் நீலகண்டன் இயக்கத்தில் ‘K13’ திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில், இதன் வெளியீடு விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Sharing is caring!