த்ரிஷாவின் கனவு நனவாகியது

நடிகை த்ரிஷாவின் நீண்ட கால ஆசையை கார்த்திக் சுப்பராஜ் நிறைவேற்றி வைத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘தலைவர் 165’ படத்தில் சூப்பர் ஸ்டார்க்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

த்ரிஷா நடிக்க வந்து பல ஆண்டுகளாகிவிட்டது. தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் இவர் சீனியர் நடிகர்கள், இளம் நடிகர்கள் என அனைத்து நடிகர்களுடனும் நடித்து விட்டார். உலக நாயகன் கமல் ஹாசனுடன் நடித்த த்ரிஷாவுக்கு ஒரேயொரு குறை தான். அது ரஜினியுடன் நடிக்காதது தான். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதே த்ரிஷாவின் நீண்ட கால ஆசையாக இருந்தது.

இப்போது அந்த ஆசையும் நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார் நடிகை த்ரிஷா. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் தான் ‘தலைவர் 165’. சிம்ரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், விஜய் சேதுபதி ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு இசை அமைக்கிறார் அனிருத். ரஜினியின் முன்னாள் காதலியாக சிம்ரன் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!