த்ரிஷா, நயன் தொடர்ந்து அமலாபாலுக்கும் அந்த ஆசை

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்க வளர்ந்த அல்லது வாய்ப்பில்லாத நடிகைகளுக்கு நயன்தாராவைப் பார்த்து ஆசை வந்திருக்கிறது. தொடர்ந்து நடிகை நயன்தாரா தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தன்னுடைய ஹீரோயின் வேல்யூ உச்சத்தில் இருக்கும் போதே ‘டோரா’, ‘அறம்’ போன்ற படங்களில் ஹீரோக்கள் இல்லாமல் நடித்து ஹிட்டாக்கியவர். இதைப் பார்த்து ஆசைப்பட்ட த்ரிஷா, ஷோலோ நடிகையாக நடித்த அரை டஜன் படங்களில், சில வியாபாரம் ஆகாமல் பெட்டிக்குள்ளேயே முடங்கி கிடக்கிறது. மீறி ரிலீஸான படங்கள் தியேட்டரில் ஓடாமல் தயாரிப்பாளர்களின் வீட்டில் முடங்கி கிடக்கிறது.

இந்நிலையில் நடிகை அமலாபாலுக்கும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கிற படங்களில் நடிக்கும் ஆசை வந்திருக்கிறது. ‘மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்னகுமாரின் அடுத்த படத்தில் தனி நாயகியாக அமலாபால் நடிக்கிறார்.

‘பெண்கள் முன்னேற்றத்திற்கான படம் கிடையாது. உங்களது எல்லா கணிப்புகளையும் உடைத்தெறிகிற, உணர்ச்சிகரமான கதையின் திரைவடிவம்’ என்கிறார் இயக்குநர் ரத்னவேல். படத்திற்கு ‘ஆடை’ என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

Sharing is caring!