நகுல் மனைவி சுருதியின் சாதனை

சென்னை ஐ.ஐ.டி.,யில் கின்னஸ் சாதனைக்காக 100 நீளமுள்ள மொறுமொறு நெய் தோசை தயார் செய்து அசத்தியுள்ளார் நடிகர் நகுல் மனைவி சுருதி. இது கின்னஸ் சாதனை என விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

சென்னை, சரவண பவன் ஓட்டல்களில் பணியாற்றும் 50 சமையல் கலைஞர்கள் இணைந்து, சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த கின்னஸ் சாதனைக்கான நிகழ்ச்சியில் மிகப் பெரிய தோசையை சுட்டு சாதனை படைத்துள்ளனர். பிரபல சமையல் கலை நிபுணர் வினோத் தலைமையில் நடந்த இந்த தோசை சுடும் நிகழ்ச்சியில், நடிகர் நகுல் மனைவி சுருதி, விஜய் டி.வி., புகழ் மகாபா ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களும் இணைந்து தோசை சுடுவதில் கலந்து கொண்டதால், கின்னஸ் சாதனை அவர்களையும் சேரும்.

இப்படி தோசை சுடுவதற்காக, பிரபல இன் ஜினியர்கள் வடிவமைத்துக் கொடுத்த, மிக நீளமான தோசைக்கல் சாதனைக்காக பயன்படுத்தப்பட்டது. 180-200 டிகிரி செண்டிகிரேட் சீரான வெப்ப நிலையில், தோசைக் கல்லை வைத்து, சமையல் கலைஞர்கள் தோசை சுடும்போதுதான், தோசை சரியான பதத்தில் எங்கும் உடைந்து, பிய்ந்து போகாமல் எடுக்க முடியும் என இன் ஜினியர்கள் கூறியதை அடுத்து, சீரான வெப்பநிலையில் வைத்து 100 அடி நீளமுள்ள தோசை சுட்டு எடுக்கப்பட்டது.

இருபது கிலோ தோசை மாவில் சுமார் ஐம்பது பேர் இணைந்து சுட்ட 100 அடி தோசை, கின்னஸ் சாதனை என விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. முன்னதாக, ஐதராபாத்தில் 54 அடி 8.65 இஞ்ச் நீளமுள்ள தோசை தான், கின்னஸ் சாதனையாக இருக்கிறது. அது தற்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது.

Sharing is caring!