நடிகரும், இயக்குநருமான நானா படேகரின் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பு

விஷால் நடித்த, தீராத விளையாட்டு பிள்ளை நடித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. பாலிவுட்டில் சில படங்களில் நடித்திருப்பவர், நடிகரும், இயக்குநருமான நானா படேகரின் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், சாக்லேட் டீப் டார்க் சீக்ரெட்ஸ் படதட்தில் நடித்த போது, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, தன் ஆடைகளை களைந்து ஆட சொன்னார் என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.

தனுஸ்ரீக்கு பர்ஹான், ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது ஆதரவை கொடுத்தனர். மேலும் தனுஸ்ரீ தத்தாவின் கார் மீது நானா படேகரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், மராட்டிய நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரேவின் தூண்டதலின் பேரில் தான் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார். மேலும் ராஜ்தாக்கரே கிரிமினல் மனநிலையை கொண்டவர். குண்டர்களை அனுப்பி தாக்குதல் நடத்தியவர், அவர் ஒரு குண்டர். பெண்கள் மீது தாக்குதல் நடத்துபவர் ஒரு தலைவராக இருக்க முடியாது என கூறியுள்ளார்.

Sharing is caring!