நடிகர் அம்ரீஷ் மறைவுக்கு வராததற்கு விளக்கம் கொடுத்த நடிகை ரம்யா

ஐதராபாத்:
ஏன் வரவில்லை… தெரியுமா? இதுதான் காரணம் என்று விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை ரம்யா.

சிம்புவின் குத்து படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா. சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருந்த போதே அரசியலிலும் காங்கிரஸில் சேர்ந்து பார்லிமெண்ட் உறுப்பினரானார்.

இவரது இந்த அரசியல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவர் சில நாட்களுக்கு முன்பு மறைந்த கன்னட நடிகர் அம்ரீஷ். ஆனால் இவரது மறைவுக்கு ரம்யா வராததால் ரம்யாவுக்கு பல இடங்களில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அம்ரீஷ் ரசிகர்கள் ஒட்டினர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரம்யா தான் வராததற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அதில் கடந்த அக்டோபரில் இருந்து நான் ஆஸ்டியோபிளாஸ்டோமா என்ற விநோத நோயினால் அவதிப்பட்டு வருகிறேன். பாத எலும்புகளில் கடுமையான வலி உள்ளது. அதை அலட்சியப்படுத்தி நடந்து சென்றால் புற்று நோயாகவும் மாற வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

அதனால் தான் நான் அம்ரீஷ் மறைவுக்கு வர முடியவில்லை. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!