நடிகர் அருண் விஜய்யின் அடுத்த படம் அக்னி சிறகுகள்

சென்னை:
அக்னி சிறகுகள்… இதுதான் அருண் விஜய்யின் அடுத்த படத்தின் பெயர்.

என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு நிகரான வேடத்தில் நடித்தவர் அருண் விஜய். அவரின் விக்டர் கேரக்டர் இன்னும் பெயர் சொல்லும் ஒன்று தான்.

இவர் அடுத்ததாக மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கிறார். இப்படத்தின் முக்கிய வேடத்தில் விஜய் ஆண்டனியும் நடிக்கிறார். இப்படத்திற்கு அக்னி சிறகுகள் என பெயர் வைத்துள்ளனர். இதை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!