நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறுகிறார் ஸ்ருதி ஹரிஹரன்

நிபுணன் படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பட நாயகி ஸ்ருதி ஹரிஹரன் சொன்ன மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கர்நாடக தயாரிப்பாளர் சங்கம் எடுத்து முயற்சி பலனளிக்கவில்லை.

அதையடுத்து ஸ்ருதி மீது ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக சொன்னார் அர்ஜூன். ஆனபோதும் ஸ்ருதிஹரிஹரன் பணியவில்லை. தனது சார்பில் அர்ஜூன் மீது வழக்குத் தொடர்ந்தார்.

இந்த நிலையில், அர்ஜூன் கைது செய்யப்படுவார் என்கிற நிலை ஏற்பட்டது. ஆனால் அவரை நவம்பர் 14-ந்தேதி வரை கைது செய்ய பெங்களூர் நீதிமன்றம் தடை விதித்தது. அதையடுத்து பெங்களூர் காவல் நிலையத்துக்கு சென்று, நிபுணன் படப்பிடிப்பில் இருந்தபோது ஸ்ருதி ஹரிஹரனிடம் தான் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று விளக்கமளித்தார் அர்ஜூன்.

அவரைத் தொடர்ந்து தற்போது ஸ்ருதி ஹரிஹரனும் காவல் நிலையம் சென்று விளக்கம் அளித்துள்ளார். அப்போது நடந்த சம்பவங்களை போலீஸ் முன்பு கூறிய ஸ்ருதி, அர்ஜூனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பதிவு செய்திருக்கிறார்.

Sharing is caring!