நடிகர் உதயநிதி வைத்த வேண்டுகோள் என்ன தெரியுமா ??

உதயநிதி ஸ்டாலின் சினிமா துறையில் முக்கிய நடிகராக இருந்தாலும், மற்றொருபுறம் திமுக கட்சியின் இளைஞர் அணியின் செயலாளராக உள்ளார்.

அவர் தற்போது தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். தன்னுடைய புகைப்படங்களை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும், பட்டப்பெயர்கள் எதுவும் குறிப்பிட்டு பேனர் வைக்கவேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

இனி, நான் சம்பந்தப்படாத, கலந்துகொள்ளாத நிகழ்ச்சிகள் பற்றிய நாளிதழ் அறிவிப்புகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ்களில் என் புகைப்படத்தை கழகத்தினர் பயன்படுத்தக்கூடாது. மேலும் பட்டப்பெயர்கள் சூட்டுவதையும், நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Sharing is caring!