நடிகர் கதிரின் நடிப்பை பாராட்டிய நடிகர் விஜய்

சென்னை:
தன்னுடன் நடிக்கும் நடிகர் கதிரின் நடிப்பை பாராட்டி தள்ளியுள்ளாராம் நடிகர் விஜய்.

விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக சர்கார் படம் திரைக்கு வந்தது. இப்படத்தை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வருகின்றார், இப்படத்தில் பல நட்சத்திரங்கள் கமிட் ஆகியுள்ளனர்.

இதில் பரியேறும் பெரும்பாள் புகழ் கதிரும் முக்கியமான ரோலில் நடித்து வருகின்றாராம். இவர் விஜய்யுடன் நடிக்கும் போது கொஞ்சம் கூட அவர் பெரிய நடிகர் என்று காட்டிக்கொள்வது இல்லையாம். அது மட்டுமின்றி எந்த ஒரு காட்சி நடித்தாலும், அது அவருக்கு பிடித்திருந்தால், உடனே மனம் விட்டு பாராட்டுகின்றார் என்று கதிர் கூறியுள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!