நடிகர் கேப்டன் ராஜுக்கு நடு வானில் மாரடைப்பு

நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, பிரபல நடிகர், ‘கேப்டன்’ ராஜுவுக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கேரளாவைச் சேர்ந்தவர், பிரபல நடிகர் கேப்டன் ராஜு 67. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில், ஜல்லிக்கட்டு, தர்மத்தின் தலைவன், ஜீவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக, மாஸ்டர்பீஸ் என்ற மலையாள படத்தில் நடித்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன், ராணுவத்தில், ராஜு பணிபுரிந்தார்.

இந்நிலையில் விமானத்தில், அமெரிக்காவுக்கு ராஜு சென்றார். விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மத்திய கிழக்கு நாடான, ஓமனில், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஓமனின் மஸ்கட் பகுதியில் உள்ள மருத்துவமனையில், ராஜுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேப்டன் ராஜுவுக்கு, பிரமிளா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

Sharing is caring!