நடிகர் சங்கம் மீது திலகன் மகன் குற்றச்சாட்டு

கடந்த வருடம் நடிகை விவகாரத்தில் சிக்கியதால் சங்கத்திலிருந்து விலக்கப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துள்ளனர்.. இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டு கொண்ட நபரை சங்கத்தில் சேர்த்த நீங்கள் சில வருடங்களுக்கு முன்பு சங்கத்திற்கு எதிராக பேசினார் என மூத்த நடிகர் திலகனை சங்கத்தை விட்டே நீக்கியது ஏன்..? சங்கத்தின் அராஜகப்போக்கை எதிர்த்து பேசியது தவறா என்றும் கேள்விக்கணைகளை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் திலகனின் மகனும், வில்லன் நடிகருமான ஷம்மி திலகன், தனது தந்தைக்கு அநீதி இழைக்கப்பட்டதாக போர்க்கொடி தூக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறும்பொழுது, தனது தந்தை உயிருடன் இருந்த காலத்தில் அவர் மீது முன் விரோதம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், தனது தந்தைக்கு ஏற்பட்ட அநீதிக்கு நடிகர் சங்கம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் நடிகர் சங்கத்தில் உள்ள, இறந்தவர்களுக்கான பட்டியலில் கூட தனது தந்தையின் பெயர் இடம் பெயரவில்லை என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் ஷம்மி திலகன்.

Sharing is caring!