நடிகர் சங்க கட்டிடம் அமைக்கும் பணிக்கு ரூ. 1 கோடி நன்கொடை

சென்னை:
நடிகர் சங்க கட்டிடம் அமைக்கும் பணிக்கு ரூ. 1 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.

நாசர் தலைமையிலான நடிகர் சங்கத்தில் விஷால் செயலாளராக இருக்கின்றார். கார்த்தி பொருளாராக இருக்கிறார்.

நடிகர் சங்கத்தின் முன்னேற்றத்திற்காக பல முயற்சிகளை இந்த குழு எடுத்து வருகிறது. தேர்தலின் போது இவர்கள் பிரமாண்ட அளவில் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும் என அறிவித்தார்.

அதன்படி சென்னை தி.நகரில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் திருமண கூடத்திற்கு ஐசரி வேலன் என்ற பெயரில் கட்டிடம் அமைக்கிறார்களாம்.

இதற்கான ஒப்புதல் பெற்றதோடு தயாரிப்பாளராக இருக்கும் ஐசரி கணேஷ் என்பவர் கட்டிடத்திற்கான செலவு ரூ.2 கோடியை தானே ஏற்பதாக அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளாராம்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!