நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு எதிராக டாப் ஹீரோ?

கடந்த தேர்தலில் சரத்குமார் அணிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால் அணியின் பதவிகாலம் முடிவடைந்து விரைவில் மீண்டும் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.

விஷால் அணியை எதிர்த்து மீண்டும் சரத்குமார் அணி போட்டியிடவுள்ள நிலையில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், விஷாலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசுகையில், விஷாலுக்கு எதிராக நாங்கள் அணி திரட்டி வருகிறோம். விஷால் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் கிடையாது.

நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு எதிராக நடிகை ராதிகா களமிறங்கினால் நிச்சயம் எங்களுடைய ஆதரவு அவருக்கு உண்டு. மேலும் இந்த தேர்தலில் சிம்புவின் ஆதரவு எங்களுக்கு 200 சதவீதம் உள்ளது. ஏற்கனவே நாங்கள் தொலைபேசியில் ஆலோசித்துவிட்டோம். இன்னும் நிறைய நடிகர்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் அதுகுறித்து முழுமையாக தெரிவிப்போம் என்றார்.

Sharing is caring!