நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் பூஜை தொடக்கம்

சென்னை:
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் பூஜை நடந்துள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘கனா’. இந்த படத்தை தயாரித்ததோடு, ஒரு பாடலும் பாடி, கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார். அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். வருகிற டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று சிவகார்த்திகேயன் தயாரிக்கும் மற்றொரு புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் துவங்கியது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஹீரோவாக ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் புகழ் ரியோ ராஜ் நடிக்கவுள்ளார்.

அவருக்கு ஜோடியாக ஷிரின் நடிக்கிறார். இதை அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்தான் பூஜையுடன் தொடங்கி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!