நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஆரம்ப பள்ளி ஆசிரியரை 3 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துள்ளார்

நடிகர் ஜி.வி.பிரகாஷ், சமூகசார்ந்த விஷயங்களுக்கும் குரல் கொடுப்பவர். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க நிதியளித்த முதல் நடிகரான ஜி.வி.பிரகாஷ், தமிழில் கையெழுத்து போட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது அவர் விழுப்புரம் மரக்காணத்தில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியரை 3 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு அந்த ஆசிரியரின் சம்பளம் சம்பந்தப்பட்ட அனைத்து செலவுகளையும் அவரே ஏற்றுள்ளார்.

மேலும், இதுபோன்ற போதுமான ஆசிரியர் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் கிராமப்புற பள்ளிகளின் ஆசிரியர்களை தத்தெடுத்தால், கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத பற்றாக்குறை நீங்கி விடும். அதனால் இன்னும் பலர் முன்வந்து ஆசிரியர்களை தத்தெடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

Sharing is caring!