நடிகர் பிரகாஷ் ராஜ் செய்த பிரம்மிப்பான செயல்!

கொரோனா வைரஸால் உலகம் முழுக்க கடும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு அரசால் விதிக்கப்பட்டுள்ளன.

தினக்கூலி வேலை செய்வோரின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சினிமாத்துறையிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற சினிமா பிரபலங்களும் சினிமா தொழிலாளர்களுக்கு நிதி அளித்து உதவி செய்துள்ளனர்.

இந்நிலையில் பிரகாஷ் ராஜ் அவரின் பண்ணை வீடு, சினிமா பட தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை, வீடு, ஆஃபிஸ் என அவற்றில் வேலை செய்வோர் அனைவருக்கும் மே மாதம் வரையிலான சம்பளத்தை முன் கூட்டியே கொடுத்து உதவியுள்ளாராம்.

மேலும் இப்போதைய சூழ்நிலையால் நின்று போன தன்னுடைய மூன்று படங்களிலும் பணியாற்றும் நபர்களுக்கும் பாதி சம்பளத்தை முன் கூட்டியே வழங்க முடிவு செய்துள்ளாராம்.

அனைவரும் முடிந்தளவு உதவி செய்வோம் என கேட்டுக்கொண்டுள்ளார். இதனை ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறை சார்ந்தோர் பலரும் வாழ்த்தியுள்ளனர்.

Sharing is caring!