நடிகர் பிரபாஸ் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை ரூ.42 கோடிக்கு விற்பனை

ஐதராபாத்:
நடிகர் பிரபாஸ் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை ரூ. 42 கோடிக்கு பிரபல நிறுவனம் வாங்கி உள்ளதாம்.

பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. இந்த படத்தின் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வருகிறார்.

படத்தின் ஷூட்டிங் இந்தியா, துபாய், அமெரிக்கா என உலகத்தின் பல நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது. சாஹோ ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரும் நிலையில் தற்போது ஓவர்சீஸ் ரிலீஸ் உரிமை விற்கப்பட்டுள்ளது.

42 கோடி ரூபாய்க்கு ஒரு பிரபல நிறுவனம் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை வாங்கியுள்ளதாம். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் அதிகபட்சம் ரூ.20 முதல் 25 கோடி வரைதான் ஈட்டும். அதை விட இரண்டு மடங்கு தொகைக்கு பிரபாஸ் படம் தற்போது விற்கப்பட்டுள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!