நடிகர் பிருத்விராஜ் ‘லூசிபர்’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்

நடிகர் பிருத்விராஜ் நூறு படங்களில் நடித்து முடித்துவிட்டு தற்போது தனது நீண்ட நாள் கனவை நனவாக்கும் விதமாக ‘லூசிபர்’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், டொவினோ தாமஸ், இந்திரஜித், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

விவேக் ஓபராய் இதில் மெயின் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சமீபத்தில் பிருத்விராஜ் இந்தப்படத்தின் கேரக்டர்கள் பற்றி கூறும்போது, படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர் உட்பட எல்லோருமே நெகடிவ் சாயல் கொண்ட கேரக்டர்களில் தான் நடிக்கிறார்கள்.. நல்லதுக்கும் கெட்டதுக்குமான இடைவெளி ஒவ்வொருவருக்கும் கொஞ்சம் கூடலாம் அல்லது குறையலாம்.. அவ்வளவுதான் வித்தியாசம் என ஒரு புது தகவலை கூறி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளார்.

Sharing is caring!