நடிகர் விசு மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை:
நடிகர் விசு மீது திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

நடிகர் விசு நல்ல கருத்துள்ள படங்களில் நடித்து அவரே கதை எழுதி இயக்கியவர். அரட்டை அரங்கம் நிகழ்ச்சி வாயிலாக பல்வேறு திறமைசாலிகளை அடையாளம் காட்டியவர். இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பலர் உதவிகள் பெற காரணமாகவும் இருந்தவர்.

தற்போது அவர் மீது நடிகர் பாக்யராஜ், ரமேஷ் கண்ணா மற்றும் பலரின் தலைமையிலான திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. இதில் முன்பு பதவியிலிருந்த விசு மற்றும் அவரை சார்ந்தவர்கள் தற்போது சங்க கணக்கு வழக்கு விவரங்களை தங்களிடம் ஒப்படைக்காமலும், சங்க பணத்தை அறக்கட்டளைக்கு மாற்றியதோடு தங்களை வரவு செலவு செய்ய முடியாதபடி செய்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!