நடிகர் விஜய் சேதுபதிக்கு கேரளாவில் எதிர்ப்பு…பரபரப்பு

கேரளா:
நடிகர் விஜய் சேதுபதிக்கு கேரளாவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது மாமனிதன் படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ளார். அந்த படத்தில் அவருடன் விஸ்வாசம் புகழ் அனிகாவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சபரிமலை சர்ச்சை பற்றி பேசிய விஜய் சேதுபதி கேரள முதல்வரின் செயலை பாராட்டுவதாகவும் தெரிவித்து இருலுந்தார். இந்து மக்களின் மத நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் அரசுக்கு, விஜய் சேதுபதி பாராட்டு தெரிவித்திருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் படப்பிடிப்புக்கு கேரளா வந்த போது அவருக்கு எதிராக பல பகுதிகளில் எதிர்ப்புகள் கிளம்பியதால் பரபரப்பு உருவானது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!