நடிகர் விதார்த்தின் ஆயிரம் பொற்காசுகள் படம் கோடையில் ரிலீஸ்

சென்னை:
நடிகர் விதார்த் நடித்து காமெடி படமாக உருவாகி உள்ள ஆயிரம் பொற்காசுகள் படத்தை கோடையில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது.

ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், ஜானவிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ஆயிரம் பொற்காசுகள் படம் கோடை விடுமுறையில் திரைக்கு வர இருக்கிறது.

ஈரமான ரோஜாவே, அலெக்சாண்டர் உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கேயார். தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும் அனுபவம் கொண்ட கேயார் தனது கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் அடுத்து வெளியிடும் படம் ஆயிரம் பொற்காசுகள்.

அறிமுக இயக்குனர் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், ஜானவிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது. மேலும் இப்படத்தில் வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜோஹன் இசையமைக்க, பானுமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி கேயார் கூறும்போது ‘இது முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாக கொண்ட கதை. தொடக்கம் முதல் கடைசி காட்சி வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். கழிப்பறை தோண்ட சென்ற இடத்தில் விதார்த், சரவணன் கூட்டணிக்கு ஒரு புதையல் கிடைக்கிறது.

அந்த செய்தி ஊர் முழுக்க பரவி ஊரே பங்கு கேட்கிறது. அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே கதை. கிராமத்து மக்களின் பசுமையான வாழ்வியலையும், அன்றாட நிகழ்வுகளையும் பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது, குடும்ப பொழுதுபோக்கு படம் என்பதால் கோடை காலத்தில் வெளியிட உள்ளோம்’ என்றார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!