நடிகர் விவேக்கிற்கு வாழ்த்து சொன்ன பாய்ஸ்

நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இந்தப் படம் நேற்று முன்தினம் (ஏப்.19 ) வெளிவரவுள்ளது. அமெரிக்காவில் ஒளிப்பதிவு செய்யப்படுவதால், இந்தப் படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இடம்பெற்றுள்ளார்கள்.  இந்தப் படத்தில் விவேக்குடன் இணைந்து சார்லி, பூஜா தேவரியா உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை விவேக் இளங்கோவன் இயக்கியுள்ளார்.

ஏற்கனவே, விவேக் ஹீரோவாக நடித்துள்ள வெள்ளை பூக்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார்.  இந்நிலையில் ஏப்ரல் 19ல்  ‘வெள்ளைப்பூக்கள்’ திரையிடப்பட்டுள்ளது. இன்னிலையில், படம் குறித்து கருத்து தெரிவித்த சித்தார்த், விவேக் சாரின் வெள்ளைப் பூக்கள் படத்துக்கு வாழ்த்துகள். தொழில்நுட்பரீதியாக பலமாகவும், சிறந்த நடிப்பு, எழுத்து என ஒருங்கே அமைய பெற்றிருக்கிறது. இளம் குழுவுக்கு வாழத்துக்கள் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த விவேக், வெள்ளைப் பூக்கள் படம் பற்றி உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சித்தார்த். மங்களம் சாரை மறக்காத பாய்ஸ் பா நீ  என்று காமெடியாக தெரிவித்தார்.

Sharing is caring!