நடிகர் விஷாலுக்கு திருமணம்… மணமகள் ஆந்திராவாம்!!!

சென்னை:
நடிகர் விஷாலுக்கு திருமணம் நடக்க உள்ளது என்ற தகவல்தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பேச்சாக உள்ளது.

நடிகர் விஷால் படங்களில் நடிப்பதை தாண்டி நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பதவிகளில் இருக்கிறார்.

நடிகர் சங்க கட்டடம் கட்டி முடித்ததும் திருமணம் என்று விஷால் கூறியிருந்தார். அந்த கட்டட வேலைகளும் நடந்து வரும் நிலையில் விஷால் திருமணத்திற்கு தயாராகி விட்டார். ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷா என்பவரை தான் அவரது குடும்பம் தேர்ந்தெடுத்துள்ளார்களாம்.

விரைவில் இவர்களது நிச்சயதார்த்தம் ஆந்திராவில் நடக்க உள்ளது என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!