நடிகர் விஷால் இயக்கத்தில் த்ரிசா

‘பீட்டா’ அமைப்பில் அங்கம் வகித்து வரும் த்ரிஷா, காரில் செல்லும்போது, யாராவது தெரு நாய்களை துன்புறுத்தினால், அவர்களிடம் சண்டை போடுவார். அதோடு, கவனிப்பார் இல்லாமல் வீதிகளில் நாய்கள் கிடந்தால், விலங்குகள் நல வாரியத்துக்கு தகவல் கொடுப்பார்.

இப்படி நாய்கள் மீது அதிகம் பிரியம் கொண்டிருப்பதால், நாயை மையப்படுத்தி, தான் இயக்கும் முதல் படத்தில், த்ரிஷாவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கிறார், நடிகர் விஷால். ஆக, முதன் முதலாக தன் நிஜ கேரக்டரை, இந்த படத்தில் பிரதிபலிக்கப் போகிறார், த்ரிஷா. காணக் கிடைத்தது கார்த்திகை பிறை போல!

Sharing is caring!