நடிகர் விஷ்ணுவின் அப்பா டிஜிபியானார்… பாராட்டுகள் குவிகிறது

சென்னை:
நடிகர் விஷ்ணுவின் அப்பாவிற்கு டிஜிபியாக பதவி உயர்வு கிடைத்துள்ளதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு. இவர் பிரபு சாலமன் படப்பிடிப்பின் போது ஒரு சண்டை காட்சியில் மோசமாக விழுந்துள்ளார். அதனால் அவருக்கு கையில் இருந்து முதுகு தண்டு வரை சில பிரச்னைகள்,

அவ்வப்போது தனது சிகிச்சை எப்படி இருக்கிறது என்று டுவிட்டரில் பதிவு செய்த வண்ணம் உள்ளார். இந்நிலையில் இவருடைய அப்பா குறித்து சந்தோஷ செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் எனது அப்பாவிற்கு டிஜிபி பதவி கிடைத்துள்ளது, மிகுந்த சந்தோஷம் என பதிவு செய்துள்ளார்.

இதைப் பார்த்ததும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!