நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு

பிரபல ஹிந்தி இயக்குனர் சாஜித்கான். ஹேய் பேபி, ஹவுஸ்புல், ஹிம்மத்வாலா, படங்களை இயக்கியவர், சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். தற்போது ஹவுஸ்புல் படத்தின் 4ம் பாகத்தை இயக்கி வருகிறார். இதில் அக்ஷய்குமார், ரித்தேஷ் தேஷ்முக், பாபி தியோல் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் சாஜித்கான் மீது 2 நடிகைகள் உள்பட பல பெண்கள் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை MeeToo-வில் கூறியிருக்கிறார்கள். நடிகை சலோனி சோப்ரா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சாஜித்கானிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அப்போது நான் ஒரு நடிகையை திருமணம் செய்யப்போகிறேன். நீ எனக்கு ஆசை நாயகியாக இரு என்றார். தினமும் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என் முன்னால் தனது ஆடைகளை களைந்து ஆபாசமாக சமிக்ஞை செய்வார். இதனால் நான் அவரிடமிருந்து விலகி வந்து விட்டேன். என்று கூறியுள்ளார்.

மற்றொரு நடிகையான ரேச்சல் ஒயிட் கூறியிருப்பதாவது: சாஜித்கான் என்னை நடிக்க வைப்பதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். “நீச்சல் உடை காட்சி இருக்கிறது. நீ நிர்வாணமாக நின்று காட்டு அந்த காட்சிக்கு பொருத்தமாக இருக்கிறாயா என்று பார்க்க வேண்டும்” என்றார். நான் அப்படிச் செய்ய முடியாது என்று அவரிடமிருந்து தப்பி ஓடிவந்து விட்டேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

மேலும் சில பெண்களும் சாஜித் மீது குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து சாஜித்கான் தற்போது இயக்கி வரும் ஹவுஸ்புல் 4ம் பாகத்திலிருந்து விலக்கிக் கொண்டிருக்கிறார். “நான் நிரபராதி என்ற நிரூபித்துவிட்டுதான் இனி படம் இயக்குவேன்” என்று கூறியிருக்கிறார்.

Sharing is caring!