நடிகைகள் பிடிவாதம்

கடந்த வருடம் நடிகை விவகாரத்தில் சிக்கி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டபோது, அவர் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’விலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் சிலமாதங்களுக்கு முன் ஜாமினில் வெளிவந்த பின்னர் படங்களில் நடித்து வருகிறார் திலீப்.

இந்தநிலையில் சமீபத்தில் கூடிய நடிகர் சங்க பொதுக்குழுவில் திலீப் நடிகர்சங்க உறுப்பினராக தொடர்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. இதற்கு சினிமா உலகத்தை சேர்ந்த பெண்கள் நல அமைப்பு இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட சில நடிகைகள் சங்கத்திலிருந்து விலகினார்கள். இதன் அடுத்தகட்டமாக இன்னும் சங்கத்தில் இருந்து விலகாத பார்வதி, ரேவதி, பத்மபிரியா ஆகியோர் நிர்வாக குழுவை உடனே கூட்ட வேண்டும் என்றும், திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தது குறித்து தங்கள் தரப்பு முடிவை கேட்க வேண்டும் என்றும் அம்மாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதற்கு அம்மாவும் ஒப்புதல் அளித்துள்ளதாம்.

Sharing is caring!