நடிகையின் புகழ்பாடும் நடிகர்

விஜய் சேதுபதியும், த்ரிஷாவும், 96 என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் பள்ளிப்பருவம், இளமைக்காலம், நடுத்தர வயது என, மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார், த்ரிஷா.

இந்த கெட்டப்புகளுக்காக அவர், தன் உடலை வருத்தி நடித்ததைப் பார்த்த விஜய் சேதுபதி, ‘த்ரிஷா சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம்; இந்த மாதிரியான ஒரு சிறந்த நடிகையுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன். தொடர்ந்து நடிக்கவும் காத்திருக்கிறேன்…’ என்று, த்ரிஷாவின் புகழ் பாடுகிறார்.

Sharing is caring!