நடிகையை மணக்கிறாரா நடிகர் ஆர்யா… கோலிவுட் பரபரப்பு

சென்னை:
மீண்டுமா? நடிகையை மணக்கப் போகிறார் நடிகர் ஆர்யா என்பதுதான் இப்போதைய பரபரப்பாகும்.

நடிகர் ஆர்யா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் அறிமுகமானவர் நடிகை சாயீஷா சிஹெல். இவர்கள் இருவரும் தற்போது காப்பான் படத்திலும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. காப்பான்’ திரைப்படம் வெளியான பிறகு, இருவரின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

ஆர்யாவின் நெருங்கிய நண்பரான நடிகர் விஷால், ஆந்திர தொழிலதிபர் மகளை திருமணம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், ஆர்யாவின் திருமண செய்தி வெளியாகியுள்ளது.

இவ்வாறு பலமுறை ஆர்யா திருமணம் குறித்த செய்திகள் வெளியாகி பின்னர் வதந்தியாக மாறிப்போயின. எனவே இதுவும் வதந்தியா அல்லது உண்மையில் திருமணமா என்று ரசிகர்கள் வட்டத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!